பிரம்மா தன் படைப்புத் தொழிலை ஆரம்பித்த பிறகு இரவில் அசுரர்களையும் பகலில் தேவர்களையும் மாலை வேளையில் பித்ருக்களையும் அதிகாலையில் மனிதர்களையும் படைத்தார்.
எனவேதான் இரவுநேரத்தில் அசுரர்களின் பலம் பல மடங்கு பெருகிறது.
மனிதர்கைளை அதிகாலை நேரத்தில் படைத்ததால் மனிதர்களின் சக்தி, ஞானம் அனைத்தும் அதிகாலையில் அதாவது காலை 4.00 மணி முதல் அதிகமாக காணப்படும். இந்த நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும். இந்த நேரத்தில் படிக்க உட்கார்ந்தால் சீக்கிரம் பதிந்து விடும். எனேவே ராட்சதர்களின் நேரத்தில் முழித்திருப்பதை விடுத்து இரவு நேரத்தில் அதாவது 9,10 மணிக்கெல்லாம் தூங்க சென்றிடுேவோம். அதிகாலை 4.00 மணிக்கு துயிெலெழுவோம்.
